தேர்தல் பிரசாரத்திற்காகச் செல்லும் வழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று தொகுதிக்குள் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பினார். திருநாரையூர் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு நபரும் அவருடைய அவருடைய மனைவியும் விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு பதறிக் கொண்டிருந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மேல் மோதிவிட்டுச் சென்றிருந்தது. அருகில் இருந்தவர்கள் திருமாவிடம், " 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஒருமணி நேரம் ஆகிறது. இன்னும் வேன் வரவில்லை" எனச் சொல்ல, கொந்தளித்த திருமா, " உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருமணி நேரமாக அந்த மனிதர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். கால் சதை பிய்ந்துபோய்விட்டது. ரத்தப் போக்கு அதிகமாக இருக்கிறது. அந்தப் பெண்மணி தாங்க முடியாத வேதனையில் கத்திக் கொண்டிருக்கிறார். தள்ளி நில்லுங்கள்" என கடிந்து கொண்டே, தனது வாகனத்தில் அடிபட்டவர்களை ஏற்றினார். 'அவர்கள் பா.ம.க கரைவேட்டி கட்டியிருக்கிறார்கள்' என கட்சித் தொண்டர் ஒருவர் சொல்ல, " இருந்துட்டுப் போகட்டும். அவர்கள் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும். இப்போது இதுதான் முக்கியமா? உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு வண்டியை விடச் சொல்" எனக் கோபத்தில் கத்தினார் திருமா.

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர், அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.
விபத்து சம்பவம் பற்றி நம்மிடம் பேசிய திருமாவளவன், " அடிபட்ட நபருக்கு கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மிகவும் கொடுமையான விபத்தாக இருந்தது. தலை, கை, காலில் பலத்த அடிபட்டிருந்தது. அந்தப் பெண்மணிக்கும் பலத்த காயம். போலீஸார், பொதுமக்கள் என அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, உதவிக்கு யாரும் வரவில்லை. இது மிகவும் வேதனைப்பட வேண்டிய விஷயம். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இப்போது அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக இருக்கிறார்கள்" என்றார் நெகிழ்ச்சியோடு.
தலைவர்களுக்குள் மாறுபாடு இருந்தாலும், மனிதநேயத்திற்கு வேறுபாடுகள் இருக்கிறதா என்ன?!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.