ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு, உயரமான ஒரு மனிதன் வந்து, ""அரசே! என் பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச் சபையினர் முன், என் திறமையைச் செய்துகாட்டுகிறேன்,'' என்றான்.
மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல் போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர் வந்து அமர்ந்தனர்.
எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன. வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி வைத்து அம்பு எய்ய வேண்டும். அவனது அந்த வித்தையைக் காண ஏராளமானோர் கூடிவிட்டனர்.
குறிப்பிட்ட நேரத்தில், பாங்கா மேடை மீதுவந்து இலக்கிற்குக் குறிவைத்து அம்பு எய்தான். சரியான குறி! அங்கிருந்த வெள்ளி இலை எங்கோ, பறந்து சென்று விட்டது.
அதேபோன்று தனது இரண்டாவது, அம்பை எய்தான். பிறகு மூன்றாவது, இவ்வாறு ஆறு இலைகளை வீழ்த்தினான். அடுத்ததாகப் பாங்கா வில்லை ஏந்தி, அடுத்த இலக்கைக் குறிவைக்கலானான்.
அவன் ஏழாவது இலையை வீழ்த்துவான் என்று எல்லாரும் நம்பியிருந்தனர். ஆனால், அவனது அம்பு விடுபடுவதற்கு முன், சட்டென்று வந்த ஒரு கை, அவனைக் கீழே தள்ளியது.
வில்-அம்போடு, அவன் வெட்டிச் சாய்ந்த மரமாகக் கீழே சாய்ந்தான்.
அவன் எழுந்து ஓட எத்தனித்த போது, விஜய நகர வீரர்கள் பலர் அவனைச் சூழ்ந்து, கைது செய்தனர்.
அவன், நாட்டில் பதற்றத்தைத் தோற்று விப்பதற்காக வந்த வெளிநாட்டு ஒற்றன் ஆவான்.
எழுந்து தெனாலிராமன் அருகில் சென்ற அரசர், ராமனை வாரி அணைத்துக்கொண்டு, ""தெனாலிராமா! இன்று மட்டும் நீ இங்கு வராமல் இருந்திருந்தால்...'' என்றபோது, குறுக்கிட்ட தெனாலி, ""அது எப்படி முடியும்? நீங்கள் எங்கோ, அங்கு தானே நானும் இருப்பேன். அவனுடைய தந்திரத்தை நேற்றே நான் உணர்ந்து விட்டேன். உங்களை கொல்வதற்கு அவன் குறிவைத்துள்ளான் என்பதை உணர்ந்து, அதற்கான, பாதுகாப்புக் கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்...'' என்றார்.
மகிழ்ச்சியடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், தனது வைர மோதிரத்தைக் கழற்றித் தெனாலிராமனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.