Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2016

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தும் ஏடிஎம் செக்யூரிட்டி


டெகரடூனின் அலகாபாத் வங்கியின் ஏடிஎம் அறையின் பாதுகாவலராக முன்னாள் ராணுவ வீரர் விஜயேந்தர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16 வருடங்களாக தனது பணியுடன் சேர்த்து ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகராக இருப்பது டெகரடூன். இதன் ஐ.எஸ்.பி.டி பேருந்து நிலையம் அருகில் அலகாபாத்தின் வங்கி அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள வங்கியின் ஏடிஎம் இரவு நேரக் காவலராக விஜயேந்தர்(54) எனும் முன்னாள் ராணுவ வீரர் பணியாற்றி வருகிறார். இவர் அக்கம் பக்கம் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் மற்றும் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லித் தருகிறார். துவக்கப்பள்ளியின் பாடங்களை விஜயேந்தரிடம் படிக்கும் குழந்தைகளில் பலர் பள்ளிக்கு செல்லாதவர்கள். இவர்களில் சிலர், விஜயேந்தர் அளிக்கும் ஊக்கத்தினால் கவரப்பட்டு பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

இது குறித்து பேசிய விஜயேந்தர் கூறுகையில், ‘பாதுகாப்பு எனும் பெயரில் பலசமயம் வெறுமனே அமர்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. இத்துடன், குழந்தைகளுக்கு துவக்கக் கல்விப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. என்னிடம் படித்து பல குழந்தைகள் இன்று பல பிரபல கல்லூரிகளில் இணைந்து பயின்று வருகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதற்காக, குழந்தைகளிடம் எந்தவிதக் கட்டணமும் பெறாமல் இலவசமாகவே சொல்லித் தருகிறார் விஜயேந்தர். மாலைவேளைகளில் அப்பகுதியில் மூடப்பட்டு விடும் கடைகளின் வாசலில் குழந்தைகள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர். இதற்கு உதவியாக அந்த வங்கிப் பலகையின் விளக்குகள் உள்ளன. நாட்டில் பலரும் செய்து வரும் பல்வேறு வகையான சமூகத் தொண்டுகளில் விஜயேந்தரின் பணி தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.