Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

சார்ஜாவில் சர்வதேச கைகடிகாரம் மற்றும் நகை கண்காட்சியில் வைரத்தினாலான‌ இசை கருவி


சார்ஜாவில் சர்வதேச கைகடிகாரம் மற்றும் நகை கண்காட்சியில்  கின்னஸ்சில் இடம் பிடித்த வைரத்தினாலான‌ இசை கருவி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சார்ஜாவில் உயர் ரக  கைகெடிகாரம் மற்றும் நகை கண்காட்சி   செவ்வாய்கிழமை தொடங்கியது.  இந்த கண்காட்சியை சார்ஜா துறைமுகம் மற்றும் சுங்க வரி துறை தலைவர் டாக்டர் ஷேக் காலித் பின் அப்துல்லா பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி அவர்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது. சார்ஜா எக்ஸ்போ சென்டரில் உயர் ரக  கைகெடிகாரம் மற்றும் நகை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடந்து வருகிறது. 40-வது முறையாக நடைபெறும் இந்த கைகெடிகாரம் மற்றும் நகை கண்காட்சி  செவ்வாய்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியினை சார்ஜா துறைமுகம் மற்றும் சுங்க வரி துறை தலைவர்  டாக்டர் ஷேக் காலித் பின் அப்துல்லா பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கண்காட்சியில் அமைந்துள்ள அரங்குகளை பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த அழகு மிகு நகைகளை பார்த்து வியந்தார். இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், இத்தாலி, தாய்லாந்து, சீனா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 30,000 சதுர அடி பரப்பளவில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகர்களை இந்த கண்காட்சி ஒருங்கிணைத்து வருகிறது.

இதனால் வருடத்துக்கு வருடம் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு 500 திர்ஹாம் நகை வாங்குபவர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 8&ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் திறந்திருக்கும். இன்று புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பெண்கள் மட்டும் பார்வையிடலாம். இந்த விழாவில் சார்ஜா வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் அப்துல்லா பின் முகம்மது அல் ஒவைஸ், சார்ஜா எக்ஸ்போ சென்டர் தலைமை செயல் அலுவலர் சைப் முகம்மது அல் மித்பா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் வைரம் மற்றும் தங்கத்தினால் செய்யப்பட்ட இசைகருவி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த இசைகருவி கின்னஸ்சில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.