Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

தள்ளுமுள்ளு, தடியடி, மோதலுக்கு இடையே வேட்புமனு தாக்கல் செய்த சரத்குமார்


திருச்செந்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுகவினருடன் கூட்டமாக வந்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சன்னதி தெருவில் இருந்து ஊர்வலமாக வந்தார். அவருடன் அதிமுகவினர், கூட்டணி கட்சியினரும் ஊர்வலமாக வந்ததாக கூறப்படுகிறது.

ருச்செந்தூர் பேருந்து நிலைய பகுதியில் டிஎஸ்பி கோபால் தலைமையிலான போலீசார் பேரிகார்ட் வைத்து அவர்களை தடுத்தனர். பேரிகார்டை தாண்டி வர முயன்ற தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணிகளையும் போலீசார் விரட்டினர். இதனால் போலீசாருடன் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருக்கிறோம். இங்கு நிற்காமல் வேறு எங்கே போவது என அவர்கள் போலீசாரை கண்டப்படி திட்டினர்.

சில முக்கிய நிர்வாகிகளுடன் மட்டும் சரத்குமார் அலுவலகத்திற்குள் சென்றார். மற்றவர்கள் பேருந்து நிலைய வாயிலில் நிறுத்தப்பட்டனர். இதனால் பேருந்துகள் நிலையத்திற்குள்ளேயும், வெளியேயும் செல்ல முடியவில்லை.

சரத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபடியே இருந்தது. வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.