ஒருநாள் மன்னன் மணிவர்மன் யானை மீது அமர்ந்தபடி நகர்வலம் வந்து கொண்டிருந்தான். வழிநெடுக மக்கள் கூட்டம்! கை கூப்பியபடி தலை தாழ்த்தி மன்னனை வணங்கினர் மக்கள்.
நகரின் கோடியில் ஒரு அரச மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
யானை மீது இருந்த மன்னன் மணிவர்மன் முனிவரைப் பார்த்தான். அவரைக் கூப்பிட்டான். அதை உணராதவராக ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் முனிவர்.
மன்னன் மணிவர்மனுக்குக் கோபம் வந்துவிட்டது. ""பிச்சைக்கார சாமியார்! இவனுக்கு எவ்வளவு திமிர்? வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கிறான்'' என்று கூறினான் மன்னன். சாமியார் அசையவில்லை.
""அவனை மேடையை விட்டுக் கீழே இறக்குங்கள்'' என்று உத்தரவிட்டான் மன்னன்.
முனிவரைச் சுற்றி வீரர்கள் சூழ்ந்தனர்.
முனிவர் கண் திறந்தார்.
யோவ் சாமியாரே! மன்னன் நான் கூப்பிடுவது கூடவா உன் காதில் விழவில்லை? உனக்கு எவ்வளவு திமிர்? என்றான் மணிவர்மன்.
""நான் தியானத்தில் இருந்தேன். காதில் விழவில்லை. எனக்கு அரசனைத் தெரியுமா..., ஆண்டியைத் தெரியுமா? எல்லாம் எனக்கு ஒன்றே'' என்றார் முனிவர்.
""மன்னா! உங்களையே எதிர்த்துப் பேசுகிறான். இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்'' என்றனர் வீரர்கள்.
""இவனைச் சிறையில் அடையுங்கள். திமிர் தானாகப் போய்விடும்'' என்று உத்தரவிட்டான்''
மன்னன்.
நாட்கள் பல சென்றன. முனிவர் உட்கார்ந்திருந்த அதே அரச மரத்தடியில் ஒரு ஏழைத்தாய் தன் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள்.
அன்றும் மன்னன் மணிவர்மன் நகர்வலம் வந்து கொண்டிருந்தான். அவன் அருகில் வரும் நேரத்தில் அந்தக் குழந்தை வீல் வீலென்று கத்தி அழ ஆரம்பித்தது.
யானைமீது உட்கார்ந்தபடியே குழந்தையைப் பார்த்தான் மணிவர்மன்.
குழந்தையின் முகத்தில் தெய்வக்களை சொட்டியது! குழந்தையின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தான் மன்னன்.
யானையைவிட்டுக் கீழே இறங்கி, தானே குழந்தையின் அருகில் சென்றான் மன்னன்.
மன்னனைப் பார்த்த குழந்தை அழுகையை நிறுத்திச் சிரித்தது. மன்னன் குழந்தையைத் தூக்கக் குனிந்து கையை நீட்டினான். குழந்தை தன் காலைத்தூக்கி மன்னன் மணிவர்மன் முகத்தில் உதைத்தது.
மன்னன் தலையில் இருந்த கிரீடம் கீழே விழுந்தது. வீரர்கள் கத்தியை உருவினர். மக்கள் திகைத்தனர்!
வீரர்களைத் தடுத்தான் மன்னன். ""குழந்தைக்கு அரசனைத் தெரியுமா? ஆண்டியைத் தெரியுமா? பாவம் விடுங்கள்'' என்றான். அப்போதுதான் இதே வார்த்தையை யாரோ சொன்னார்களே எங்கே என்ற எண்ணம் எழுந்தது.
யோசனை செய்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தான் "அட, இந்த இடம் அந்த சாமியார் உட்கார்ந்த அரசமரத்தடியல்லவா? அதே இடத்தில் அதே வார்த்தையை என் வாயால் சொல்லும்படி ஆயிற்றென்றால் இது ஏதோ தெய்வ வாக்குப்போல் அல்லவா இருக்கிறது''
மன்னன் மணிவர்மன் சில நிமிடங்கள் கண்களை மூடியபடி யோசனையில் ஆழ்ந்தான்.
""அன்று இதே வார்த்தையைத்தானே சாமியாரும் சொன்னார். நான் புரிந்துகொள்ளவில்லையே! அவரிடம் மன்னிப்புக் கேட்பதை விடுத்து சிறையில் அடைத்து விட்டேனே?'' என நினைத்த மணிவர்மன் குழந்தையைப் பார்த்தான். குழந்தை சிரித்தபடியே இருந்தது.
ஆண்டவா! என் ஆணவத்தை ஒரு நொடியில் அடக்கிவிட்டாய்! எனக் கையெடுத்துக் கும்பிட்ட மன்னன் உடனடியாக சாமியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.