Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

முன்விரோதத்தில் ரவுடி சுட்டுக் கொலை 3 பேர் கைது: இருவருக்கு வலை வீச்சு


முன்விரோதத்தில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர். டெல்லியை சேர்ந்தவன் சுராஜ். பிரபல ரவுடி கும்பலை சேர்ந்தவன். கடந்த ஏப்ரல் 2ம் தேதி மதாங்கீர் பகுதியில், சுராஜை ஹரி கிருஷ்ணன், சந்தீப், முகேஷ் ஆகிய மூன்று பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர்.

 இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை கொலையாளிகள் மூன்று பேரும், ஆசியான் மார்க்கெட் பகுதிக்கு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பின் அங்கு சென்ற போலீசார், குற்றவாளிகள் மூவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  சுராஜின் கும்பலை சேர்ந்த சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்லா என்பவனை கொலை செய்துள்ளனர். அதற்கு பழிவாங்குவதற்காக சுராஜை, அதாவா கும்பலை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இக்கொலை வழக்கில் தொடர்புடைய அதாவா கும்பலின் தலைவன் மற்றும் அக்கும்பலை சேர்ந்த ஜேஷ்வர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.