Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

என்.ஐ.ஏ., அதிகாரி சுட்டு கொலை


தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும், என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர், குழந்தைகள் கண் முன், சுட்டுக் கொல்லப்பட்டார். மர்ம நபர்கள், அவரை, 21 முறை சுட்டு உள்ளனர்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கும், உத்தர பிரதேச மாநிலத்தின், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முகமது தன்சில் அகமது, 45. எல்லை பாதுகாப்புப் படையின் உதவி கமாண்டன்டாக இருந்த இவர், அயல் பணியாக, என்.ஐ.ஏ.,வில்
டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தார்.

21 முறை சுடப்பட்டார்
டில்லியில் பணியாற்றி வந்த இவர், உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மனைவி, இரு குழந்தைகளுடன் சொந்த ஊரான சகஸ்பூர் சென்றிருந்தார். திருமணத்தை முடித்து விட்டு, நேற்று ஊர் திரும்பிய வழியில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது காரை வழிமறித்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தன்சில் அகமது மீது, மர்ம நபர்கள், 21 முறை சுட்டுள்ளதாக, அவரது சகோதரர் தெரிவித்தார்.

தப்பின குழந்தைகள்
இந்த துப்பாக்கிச் சூட்டில், நான்கு குண்டுகள் பாய்ந்து, படுகாயமடைந்த அவரது மனைவி, நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில், அவரது குழந்தைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.இந்த பயங்கர சம்பவம் குறித்து, லக்னோவில் உள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் குழுவினர், உத்தர பிரதேச அதிரடிப் படையினர், பிஜ்னோர் சென்று விசாரிக்கின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று, தடயங்களை சேகரித்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க, அருகில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
கொலையாளிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, மாநிலத்தின் எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.