Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

தமிழக புதுமண தம்பதி திருமலையில் தற்கொலை


தமிழகத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி, திருமலையில் தற்கொலை செய்து கொண்டனர்.கோயம்புத்துார், கருவாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சம்பத்குமார், சமீபத்தில் திருமணமான தன் மனைவி சத்யவாணியுடன், நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தார். கோவில் அருகே உள்ள ஓய்வறையில், அறை எடுத்து
இரவில் தங்கினர். நேற்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். இருவரும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து, திருமலை இரண்டாவது காவல் நிலைய போலீசார், அறையில் சோதனை நடத்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, மூன்று பக்க கடிதத்தை எடுத்தனர்.
அதில், 'தற்கொலை செய்து கொள்ள போகிறோம்' என, எழுதப்பட்டிருந்தது. அதுகுறித்து மொபைல் போனில் பேசிய, 'வீடியோ' பதிவும் இருந்தது. உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார், தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.