Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

"இந்தப் பச்சப் புள்ளைக்கு கொடுக்காம விட்டுட்டீங்களேம்மா"


அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்த விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சீட் கிடைத்த அதிர்ஷ்டசாலிகளைப் பாராட்டியும், கலாய்த்தும் பேஸ்புக், டிவிட்டரில் ஸ்டேட்ஸ்கள் பறக்கின்றன.

இந்த நிலையில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பலருக்கு கிடைக்காமல் போனதை வைத்தும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

குறிப்பாக ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயிருந்த சமயத்தில், அவருக்காக "போராட்டம்" நடத்தி (ஜெயா டிவி) கேமரா முன்பு அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து, "நாக்குப் பூச்சி" வெளியே வரும் அளவுக்கு நாடி நரம்பெல்லாம் புடைக்க குமுறித் தள்ளிய சிலருக்கு டிக்கெட் கொடுக்காமல் விட்டுட்டாங்களே ஜெயலலிதா என்று பலரும் ஆதஙகத்தை கொட்டி வருகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் இந்த "புள்ளாண்டான்".. இவரை யாரால் மறக்க முடியும்.. இவருக்கு சீட் கிடைக்காமல் போனதை வைத்து பேஸ்புக்கில் கருப்பு கருணா என்பவர் போட்டுள்ள போஸ்ட் இது.

இவர் சீட் கேட்டாரா என்பது வேறு விஷயம். ஆனால், இவருக்கு குடுக்கலையே என்று ரொம்பவே வேதனைப்படுகின்றனர் நெட்டிசன்கள். சீரியஸாக யோசித்துப் பார்த்தால், ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயிருந்த சமயத்தில் தெருவில், ரோட்டில், இண்டு இடுக்குகளில் போராட்டம் நடத்திய யாருக்குமே சீட் கிடைத்தது போலத் தெரியவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.