Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

மிஸ்டர் பிரெயின்!-சிறுகதை


ஒரு காளைமாடு தப்பித்து காட்டுப் பக்கம் ஓடியது. எதிரே சிங்கம் வந்தது. அதுவரை சிங்கத்தைப் பார்த்திராத மாடு, "நீ யார்?'' என்று கேட்டது.
"நான் விலங்குகளின் அரசன் சிங்கராஜா. என்னை யார் என்று கேட்குமளவு நீ பெரிய ஆளா?''
மனதுக்குள் நடுக்கம் பிடித்தது காளைக்கு. இருப்பினும் சமாளித்துக் கொண்டு, "நானும் பலசாலிதான்!'' என்றது.
"எப்படி?''
"இந்தப் பாறையில் நான் உதைத்தால் தீப்பொறி பறக்கும்,'' என்றது.
"சும்மா உதார் காட்டாதே!'' என்றது சிங்கம்.
"இப்போது பார்!'' என்றபடி காளைமாடு தன் பின்னங்காலால் அங்கிருந்த பாறையை உதைத்தது. உடனே தீப்பொறி பறந்தது. அதன் கால்களில் அடிக்கப்பட்டிருந்த லாடம் பாறையில் உராய்ந்ததுதான் இதற்குக் காரணம். அதை அறியாத சிங்கம், மாட்டுக்கு வந்தனம் கூறி வந்த வழியே திரும்பியது.
பிரெயின் இருந்தால் போதும் எந்த ஆபத்தையும் சமாளிக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.