ஐதராபாத்தின் நீரட்மெட் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜூ. அழகு சாதன பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா(30). தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பூர்ணிமா மீண்டும் கர்ப்பம் தரித்தார். தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால் மூன்றாவதாகவும் ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறக்காததால் அவர் விரக்தியடைந்தார். தனது குழந்தையை குழந்தையில்லாதவருக்கு கொடுத்துவிடும்படி கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு குடும்பத்தினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ஆண் குழந்தையை பூர்ணிமா வெறுத்து ஒதுக்கினார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு கடையில் இருந்த ஸ்ரீதருக்கு போன் செய்த பூர்ணிமா, “பைக்கில் வந்த மர்மநபர்கள் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து நகையை பறித்து சென்றதோடு, குழந்தையை தாக்கிவிட்டனர்” என தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீதர், குழந்தையின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை டாரங்காவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் குழந்தையை காந்தி மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி பரிந்துரைத்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கழுத்து அறுக்கப்பட்டிருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் விரைந்து வந்து பூர்ணிமா தெரிவித்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு ரத்தக்கறை இல்லை. மேலும் பூர்ணிமா குழந்தை இறந்ததற்கு அழவில்லை. இதனால் பூர்ணிமாவிடம் விசாரித்ததில் அவர் தான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.