டில்லியில், 17 வயது மாணவன், மிக வேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில், சாலையை கடக்க முயன்றவர் உயிரிழந்தார்.டில்லி சிவில் லைன்ஸ் பகுதியில், சமீபத்தில் சாலையை கடக்க முயன்ற, சித்தார்த்தா சர்மா, 32, என்பவர், வேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.அந்த வெளிநாட்டுக் காரை ஓட்டி வந்தது, பிரபல தொழிலதிபர் ஒருவரின், 17 வயது மகன் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொழிலதிபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, சர்மாவின் உறவினர்கள் நேற்றுவெளியிட்டனர்.அதில், அந்தக் கார், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் வந்தது. சாலையை கடக்க முயன்ற சர்மா, காரைப் பார்த்ததும் திரும்ப முயன்றார்; ஆனால், வேகமாக வந்த கார் மோதியதில், 15 மீட்டர் உயரத்துக்கு துாக்கி எறியப்பட்டு, கீழே விழுந்தார். இதில், தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோ காட்சிகள், நேற்று, வட மாநில, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.