மத்திய பிரேதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உள்துறை
அமைச்சருமான பாபுலால் கவுர் பெண் ஒருவரின் பின்புறம் கையால் தட்டும் வீடியோ காட்சி
ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
85 வயதான பாபுலால் கவுர் மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக
இருக்கிறார். போபால் அருகே நேற்று பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்த அவர்
பஸ்ஸில் ஏறும் ஒரு பெண்ணின் பின்புறத்தை கையால் தட்டுவது போல் ஒரு வீடியோ உள்ளூர்
தொலைக்கட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவிபரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் அமைச்சரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து
வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ காட்சியில் இருப்பது உண்மையில்லை எனவும்,
பேருந்தில் வேகமாக ஏற பாஜக பெண் தொண்டர்களை தான் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர்
பாபுலால் கவுர் விளக்கமளித்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.