Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

தண்ணீரின்றி மக்கள் அவதி... அமைச்சர் ஹெலிபேட்க்கு தண்ணீர் வீணடிக்கப்பட்டதால் சர்ச்சை!


தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், அமைச்சரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக ஹெலிபேட் அமைப்பதற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்டு இருப்பது தற்போது மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லாத்தூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.



மராத்வாடா பிராந்தியத்துக்கு 27 லட்சம் லிட்டர் தண்ணீருடன் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ரயில் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டது இதை தொடர்ந்து, 3 சிறப்பு ரயில்கள் மூலம் ராஜஸ்தானிலிருந்து மராத்வாடா பிராந்தியத்துக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.



லாத்தூர் மாவட்டத்தில் நிலவும் வறட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில பா.ஜ.க. வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே, பெல்குண்ட் எனும் கிராமத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தார்.



அவரது ஹெலிகாப்டர் அந்தக் கிராமத்தில் தரையிறங்குவதற்காக, 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருக்கிறது.



இந்நிலையில், லாத்தூர் மாவட்டத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தையும், மக்கள் படும் அவஸ்தையையும் பொருட்படுத்தாமல், அமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக தண்ணீர் வீணாக்கப்பட்டு ஹெலிபேட் அமைக்கபட்டு உள்ளதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேலும், இந்த செயலுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.