Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி


கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் சருமத்துக்கு முக்கிய எதிரி. வெயில் காலத்தில் சருமம் வறண்டு, கருமையாகி, பொழிவிழந்து காணப்படும். அதை போக்கவே வெயில் காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சி அளிக்க பேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் மற்றும் ஹெட் மசாஜை அறிமுகம் செய்துள்ளது கிரீன் டிரன்ட்ஸ் அழகு நிலையம். இதன் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணன் இதோ உங்களுக்காக விளக்கம்
அளிக்கிறார்...

சென்னையில் அதிக நாட்கள் சுட்டெரிக்கும் சூரியனைத் தான் பார்க்க முடியும். மற்ற காலங்களை விட சரும பாதிப்பு ஏற்படுவது கோடை வெயில் காலத்தில்தான். சருமத்தில் உள்ள நீர்சத்து குறைவதால் சருமம் பொலிவிழக்கும், கருமையாகும். சருமம் மட்டும் இல்லாமல் தலைமுடி கை, கால்களும் வறண்டு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதை சமாளிக்க வெயில் காலத்துக்கு ஏற்ப 4 விதமான அழகு குறிப்புகள்

சில் ரேடியன்ஸ் பேஷியல்:

தர்பூசணி மற்றும் செர்ரி பழங்களின் கலவை கொண்ட கிரீம்களால் பேஷியல் செய்யப்படும். முதலில் முகத்தை சுத்தம்  செய்து, வறண்ட சருமத்தை நீக்கி, மசாஜ் செய்வதால் முகம் புத்துணர்ச்சியோடு காட்சியளிக்கும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி  ஆக்சிடெண்ட்கள் வெப்பத்தால் ஏற்படும் கருமையை போக்கி பளபளப்பாக்கி, ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமாக்கும்.

மிஸ்ட்டி ஹாண்ட்ஸ் அண்ட் பீட் மெனிக்யூர் பெடிக்யூர்:

உடலிலுள்ள மற்ற பாகங்களை விட கைகள் மற்றும் கால்கள் நேரடியாக சூரிய வெப்பத்தால் பாதிப்படைகிறது. ராஸ்பெரி மற்றும் ஸ்பியர் மின்ட் கலவை கொண்டு கை மற்றும் கால்களில் மசாஜ் செய்து இறந்த போன தோல்களை  அகற்றுவோம். ராஸ்பெரி சரும நிறம் மாறுவதை தடுக்கிறது. ஸ்பியமினட், கிருமி நாசினியாக செயல்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்பட்ட பாதவெடிப்பை போக்க உதவுகிறது.

கூல் ஹெட் மசாஜ்:

மருதாணி மற்றும் செம்பருத்தி கொண்டு செய்யப்படும் ஆயில் மசாஜ், தலைமுடியின் நிறத்தை கூட்டி நன்கு ஊட்டமளிக்கும். இதில் உள்ள இயற்கை கண்டிஷன் முடிகளை பளபளப்பாக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.