Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

எலுமிச்சம் பழம்!-அழகு குறிப்பு



மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம், கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களை தடுக்கிறது.
* வெல்லம் கரைத்த நீரில், சுக்கைத் தட்டிப் போட்டு, எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள், கோடை வெயிலுக்கு நல்லது.
* வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி, ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, தர்பூசணி பழத் துண்டுகளை சேர்த்து அருந்தினால், உடல் உஷ்ணம் குறையும்.
* கோடையில் ஏற்படும் நீர் கடுப்பு குறைய, எலுமிச்சை சாறில், நல்லெண்ணெய் கலந்து குடிக்க குணமாகும்.
* எலுமிச்சை சாறு, பித்தத்தை குறைக்கும்.
* சோற்றுக் கற்றாழையுடன், எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், சரும பிரச்னை தீரும். குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளித்தாலும் சரும நோய் அண்டாது.
* தினமும் இரு வேளை லெமன் டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்.
* பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.