தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயார் என நாமக தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இளைஞர் அமைப்பு களோடு நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார் கார்த்திக். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
எவ்வளவு ஓட்டு வாங்குகிறோம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல; எந்தக் கொள்கைக்காக களத்தில் நிற்கிறோம் என்பதுதான் முக்கியம். சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு மவுனமாக நிற்பதற்கு நாங்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை. தனித்து நின்றாலும் தன் மானத்தை இழக்க மாட்டோம்.
எல்லா தலைவர்களையும் மதிப் பவன் நான். அதனால் யாரையும் விமர்சிக்க மாட்டேன். எங்களது பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த சட்டசபை தேர்தலில் அதை நிரூபித்தும் இருக்கிறோம். அதிமுக விடம் இருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என எதிர் பார்க்கிறோம். அதிமுக அழைத் தால் கூட்டணியில் இணைவோம். இல்லாவிட்டால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, தஞ்சை, சென்னை, நீலகிரி ஆகிய ஒன்பது மாவட்டங் களில் 25 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.