உலகை மாற்றிய புதுமைகள்!
இது ஆப்ஸ் யுகம். ஒவ்வொருவரின் ஆண்ட்ராய்டு போனிலும் குறைந்தது பத்து ஆப்ஸ்களாவது இருக்கிறது. இதையும்தாண்டி, என்னிடம் இந்த ஆப்ஸ் இருக்கிறது, உங்களிடம் இல்லையா என நம்மை உசுப்பேற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வாட்ஸ்-அப் தவிர, பஸ், ரயில் மற்றும் விமான டிக்கெட் பதிவு செய்ய, ஆன்லைனில் பொருட்களை வாங்க, வங்கி தொடர்பான வேலைகளைச் செய்து முடிக்க என ஏறக்குறைய நம் வேலைகள் அனைத்தையும் எளிதில் செய்து முடிக்கும் துணைவனாக மாறிவிட்டன இந்த ஆப்ஸ்கள்.
அப்ளிகேஷன் சாஃப்ட்வேர் என்பதன் சுருக்கம்தான் ஆப்ஸ். செல்போன் களில் உள்ள தனித்துவமான வேலை களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் சாஃப்ட்வேர்கள்தான் இந்த ஆப்ஸ் களுக்கு அடிப்படை. 2008-க்குப் பிறகு உலக அளவில் ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கு மிகப் பெரிய அளவில் உயர்ந்ததைக் கண்ட செல்போன் நிறுவனங்கள், செல்போன்களில் இயங்கும் ஆப்ஸ்களைத் தயாரிக்கத் துவங்கி, விற்பனை செய்யவும் ஆரம்பித்தன. ஆப்ஸ்களை விற்கும் ஆன்லைன் கடைகள்தான் ஆப்பிள் ஸ்டோர், கூகுள் ப்ளே ஸ்டோர் முதலியன.
உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்க ஃபிட்னெஸ் ஆப்ஸ், செய்திகளைப் படிக்க நியூஸ் ஆப்ஸ் என அனைத்துக்கும் ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படிவரும் ஆப்ஸ்களை ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனை உணர்ந்த ஆப்ஸ் தயாரிப்பாளர்களும் புதிது புதிதாகத் தினமும் நூற்றுக்கணக்கான ஆப்ஸ்களை உருவாக்கி அவற்றைப் புழக்கத்தில் விடுகின்றனர்.
இத்தனை காலமும் இணையதளத்தை நம்பி பிசினஸ் செய்தவர்களும், இன்றைக்கு ஆப்ஸுக்கு அடியோடு மாறி வருகிறார்கள். மைந்த்ரா நிறுவனம் இதற்கு நல்லதொரு உதாரணம்.
சர்வதேச அரசியல் தொடங்கி, நல்ல சாப்பாடு தரும் ஹோட்டல்கள் வரை அனைத்துமே ஆப்ஸ் மூலம் நமக்குக் கிடைக்கிற அளவுக்கு உலகம் மாறிவிட்டது. இணையம் உலகத்தை நம் கைக்குள் கொண்டு வந்தது என்றால், ஆப்ஸ்கள் உலகத்தை நம் விரல்நுனிக்குள் கொண்டுவந்துவிட்டன. உலகை மாற்றிய லேட்டஸ்ட் புதுமைகளில் ஆப்ஸ்கள் முதன்மையாக இருக்கின்றன என்று சொன்னால், அது நூற்றுக்கு நூறு நிஜம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.