Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்கிரிம் காலியாகிவிட்டதால் நின்று போன திருமணம்


சமீப காலமாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போவது அதிகரித்து கொண்டு வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்கிரிம் இல்லாததால் திருமணம் நின்று போனது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த புதனன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்கிரிம் இல்லாததால் இரு வீட்டு உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகன் வீட்டார் சாப்பிட சென்ற போது ஐஸ்கிரிம் காலியாகி விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமுற்ற மணமகன் வீட்டார்கள் தகராறில் ஈடுபட்டனர். இரு வீட்டாருக்கும் இடையே மோதல் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பலர் காயமுற்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து சில பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் இந்த செயலால் ஆத்திரமுற்ற பெண் வீட்டார் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசாரும் சில பேர் காயமுற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலவரமாக மாறியதால் திருமணத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போவது அதிகரித்து கொண்டு வருகிறது. டாய்லெட் இல்லாமல் திருமணம் நின்று போனதும் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.