எல்லாருக்குமே திங்கள் கிழமை என்பது டென்ஷனான நாளாகவே தெரியும். காலை வேலைக்கு செல்பவர்கள் துவங்கி, கல்லூரிக்கு செல்பவர்கள் வரை அனைவருமே அந்த நாளை டென்ஷனான நாளாகதான் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதலே மன்டே ஸ்டேட்டஸ்கள் தெறி ஹிட் அடிக்கும். இப்படி அனைவரும் சலித்துக்கொள்ளும் திங்கள் கிழமையை செம ஃபிரெஷ்ஷாக துவங்க 5 வழிகள் இதோ...
1. ஃப்ரெஷ்ஷாக துவங்குங்கள்!
காலை எழுந்து உங்களது வழக்கமான உடற்பயிற்சி அல்லது 2 கி.மீ நடைபயிற்சி, 5 கி.மீ சைக்கிளிங் இதில் ஏதாவது ஒன்றோடு அன்றைய நாளை துவக்குங்கள். இவையெல்லாம் அதிகாலை 6- 6:30 மணிக்குள் முடித்து, அலுவலகம் அல்லது கல்லூரிக்கு செல்ல தயாராகுங்கள். அன்றைய நாள் ஃப்ரெஷ்ஷாக துவங்கும். இந்த உத்வேகம் நாள் முழுக்க உங்களோடு இருக்கும்.
2. மனதை ரிலாக்ஸ் ஆக்குங்கள்!
காலை எழுந்து செல்போனில் ஃபேஸ்புக் டிபிக்கு எத்தனை லைக் வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் யார் மெஸேஜ் செய்திருக்கிறார்கள் என துவங்காமல், பிடித்தமான பாடல் ஒன்றை கேளுங்கள். மென்மையான இசையோடு கூடிய பாடலாக இருந்தால் அன்றைய நாள் அமைதியான முறையில் துவங்கும். இந்த அமைதி அலுவலக டென்ஷனை குறைக்கும்.
3. யாரோடு சாப்பிடப்போகிறீர்கள்!
அன்றைய நாளில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்களுக்கு பிடித்தமான நபருடன் காலை உணவை சாப்பிடத் துவங்குங்கள். உங்கள் வார இறுதியை பற்றிய கலந்துரையாடலுடன் துவங்கும் அந்த நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கும். மனதுக்கு பிடித்த விஷயங்களோடு துவங்கும்போது உங்கள் விருப்பம் அதிகமாக இருக்கும். அதனால் டென்ஷன் உங்களை நெருங்காது.
4. வேகமாக இருங்கள்!
திங்கள் கிழமைகளை பெரும்பாலும் நாம் மெதுவாக ஆரம்பிப்பதுதான் நமது டென்ஷனுக்கு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. திங்கள் கிழமைகளை வேகமாக துவங்குங்கள். நீங்கள் எழுந்திருப்பது துவங்கி, பஸ் பிடிப்பது வரை அனைத்தையுமே 10 நிமிடம் முன்பாகவே செய்ய ஆரம்பியுங்கள். தானாகவே உங்கள் நாள் வேகமாக துவங்கி விடும்.
5. அப்டேட் செய்யுங்கள்:
வார இறுதி நாட்களில் கல்லூரி அல்லது அலுவலக வேலைகளில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். உங்கள் வேலை அல்லது படிப்பில் நடந்துள்ள அப்டேட்டுகளை காலை அலுவலகம்/ கல்லூரி வந்தவுடன் அப்டேட் செய்யுங்கள். இதனை முழு கவனத்துடன் செய்யும்போது உங்கள் திங்கள் கிழமை போரடிக்காமல் இருக்கும்.
இந்த விஷயங்களை தொடர்ந்து செய்ய துவங்கிவிட்டால் இனி ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் மன்டே ஸ்டேட்டஸ்களில் ''நாளை மன்டே, ஜாலியான நாள்'' என்று சந்தோஷமாக உங்கள் ஸ்டேட்டஸ் இருக்கும். இதுதான் பல வெற்றியாளர்களின் ஃபார்முலாவும் கூட. நீங்களும் வெற்றியாளர்தானே பாஸ்! இனி உங்கள் திங்கட்கிழமைகளை தெறிக்க விடுங்கள்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.