செம்பரம்பாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்பது பொய் பிரசாரம் என்று முதல்வர் ஜெயலலிதா விழுப்புரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பேசும்போது, ''கருணாநிதி மயிலாடுதுறையில் நடந்த கூட்டத்தில், முதல் கையெழுத்து மதுவிலக்குக்கு தான் என்று தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் தேர்தல் அறிக்கையில் எதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். திருச்சி பொதுக்கூட்டத்தில் நான் இதுபற்றி பேசிய பிறகு, புதிய சட்டம் தேவையில்லை என்று இப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. முதல் கையெழுத்து மதுவிலக்குக்கு தான் என்று சொன்ன கருணாநிதி 1974-ம் ஆண்டிலேயே தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கை கொண்டு வந்தோம் என்றும் சொல்லி இருக்கிறார்.

1974-ம் ஆண்டில் பூரண மதுவிலக்கா அமலில் இருந்ததா? இல்லையே. 1974-ம் ஆண்டு போன்ற மதுவிலக்கு தான் இப்போதும் கொண்டு வரப்படும், பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியாது என்று தான் கருணாநிதி சொல்லுகிறாரா? அதாவது தனியார் மூலம் மது விற்கப்படும் என்கிறாரா? இப்படி, மதுவிலக்கு பற்றி குழப்பமாக பேசி வாக்குகளை அபகரித்து விடலாம் என நினைத்தால் அது நிச்சயம் முடியாது.
தி.மு.க. கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பல திட்டங்களை நிறைவேற்றவில்லை. தி.மு.க. நிறைவேற்றிய ஒரே திட்டம் இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி வழங்கும் திட்டம்தான். அதிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றிவிட்டது. எல்லாரும் 21 இன்ஞ் டிவி வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 இன்ஞ் டிவி மட்டுமே வழங்கப்பட்டது. அதேநேரத்தில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என கூறிய கருணாநிதி அதை நிறைவேற்றவில்லை.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அ.தி.மு.க. ஆட்சியில் சீரமைக்கப்பட்டு, ரூ.75 கட்டணத்தில் இணைப்பு வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இது 250 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கேபிள் கட்டணம் குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் எதுவுமே குறிப்பிடவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதேனும் துன்பத்திற்கு உள்ளானால், ஓடோடிச் சென்று அவர்களை அரவணைத்து, பாதுகாத்து உதவிகளை வழங்குவது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். இலங்கையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் என்றாலும், ஒடிசாவில் புயல் மழையில் தத்தளித்த மீனவர்கள் என்றாலும், இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மீனவர்கள் என்றாலும், ஈரான், சவுதி அரேபியா, வங்காளதேசம், சேஷல்ஸ் என பல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் என்றாலும், உத்தரகாண்ட் மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் சிக்கியவர்கள் என்றாலும் அவர்களை எல்லாம் காப்பாற்றி தேவையான உதவிகளை அளித்தது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான்.
தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 1.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதுதவிர அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3,03,111 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தமிழகத்தில் 1.08 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க.வினர் எதுவுமே செய்யவில்லை என பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.வினர் வாக்கு கேட்டு வரும்போது, இத்திட்டங்களை கூறி, அவர்களை விரட்டி அடியுங்கள்.
சினிமாவுக்கு கதை, வசனம் எழுதுவது போல, செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தது நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்தன என்றெல்லாம் பேசியுள்ளார் கருணாநிதி. செம்பரம்பாக்கம் ஏரியை யார் உடைத்தது என்பதை விவாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அவரது பேச்சை வெளியிட்ட அவர்களது கட்சிப் பத்திரிகைக்கு, இதுபோல அபாண்டமாக பொய் பேசுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், அதன் காரணமாக கருணாநிதியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிந்திருக்கிறது.
அதனால் தான், அவரது பேச்சை வெளியிடும்போது செம்பரம்பாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்று மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். இதுவும் பொய் தான் என்பதை நான் ஏற்கனவே பொதுக்கூட்டங்களில் விளக்கியுள்ளேன். இப்படி இவர்கள் பேசும் பச்சை பொய்கள் மூலம் வாக்குகளை சேகரிக்கலாம் என்ற எண்ணத்தில் அவரது தனயன் நடத்துகின்ற பிரசாரங்கள் கூட பயன் பெறாமல் போய் விடுமோ என தனது கவலையை தெரிவித்ததோடு, ஏமாற்றத்தை தந்து விடாதீர்கள் என மக்களிடம் கெஞ்சியும் கேட்டுள்ளார்.
கருணாநிதியும், அவரது தனயனும் எவ்வளவு தான் பொய் பிரசாரங்களை மேற்கொண்டாலும், எவ்வளவு தான் கெஞ்சி கேட்டுக்கொண்டாலும், எவ்வளவு தான் தங்கள் தவறை மன்னிக்கும்படி மன்றாடினாலும், மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.