April 1, 2016
அவரே மேல்-சிறுகதை
முன்னொரு காலத்தில் சோழ நாட்டை அசுவத்தாமன் என்ற அரசன் ஆண்டு வந்தான். கொடுங்கோலனான அவன், மக்களைக் கொடுமைப்படுத்துவதில் மகிழ்ச்சி கண்டான்.
புதிது புதிதாக வரிகளைப் போட்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனுடைய கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள் அழுது புலம்பினர்.
அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. முரசு அடிப்பவனை அழைத்தான்.
"நாளை என் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு மூட்டை அரிசியை அரண்மனையில் தர வேண்டும். அதற்குப் பதில் ஒரு மூட்டை நெல்லைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் இப்படியே செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர் யாராக இருந்தாலும் தூக்கில் போடப்படுவர். இந்தச் செய்தியை நாடெங்கும் தெரிவி,'' என்றான்.
முரசு அடிப்பவனும் அப்படியே செய்தான்.
தண்டனைக்கு அஞ்சிய மக்கள் அரிசி மூட்டையுடன் அரண்மனைக்கு வந்தனர். நெல் மூட்டையைப் பெற்றுக் கொண்டு திரும்பினர்.
உள்ளம் நொந்த அவர்கள், "கொடுங்கோலனே! உன் கொடுமைகளுக்கு அளவே இல்லையா? உன் பிறந்த நாளன்றும் எங்களுக்குத் துன்பம் தருகிறாயே. உன் இறந்த நாளைக் காண்பதுதானே எங்களுக்கு மகிழ்ச்சி!'' என்று புலம்பினர்.
ஏழை மக்கள் அழுத கண்ணீர் வீணாகுமா?
அரசன் கடுமையான நோயில் விழுந்தான். மருத்துவர்களும், அவனைக் காப்பாற்ற இயலாது என்று சொல்லி விட்டனர்.
சாகும் நிலையிலிருந்த அவன், தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தினான். தன் அருகே அழுதபடி நின்றிருந்த மகனைப் பார்த்தான்.
"மகனே! நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். எல்லாரும் என்னைக் கொடியவன்; பாவி என்று திட்டுகின்றனர். என்னால் அதைத் தாங்க முடியவில்லை.
"மக்கள் எல்லாரும் என்னை நல்லவன், புண்ணியவான் என்று புகழ வேண்டும். உன்னால், அப்படிச் செய்ய முடியுமா?'' என்று கேட்டான்.
"தந்தையே! உங்களை யார் யார் பழித்தார்களோ அவர்கள் வாயாலேயே உங்களைப் புகழ வைக்கிறேன். இது உறுதி!'' என்றான் அவன்.
இதைக் கேட்ட அரசன் அமைதியாகக் கண்களை மூடினான்.
மகன் ஆட்சிக்கு வந்தான்.
நாட்டு மக்கள் எல்லாரும் தன் தந்தையை நல்லவர், புண்ணியவான் என்று புகழும்படி செய்தான்.
அப்படியானால், அவன் என்ன செய்து இருப்பான்?
ஆட்சிக்கு வந்ததும் தன் அப்பா செய்த கொடுமைகளை விட அதிகமாக கொடுமைகள் செய்தான். இதைக் கண்ட மக்கள், "இந்தக் கொடூரனை விட இவன் அப்பாவே மேல்' எனப் புலம்ப ஆரம்பித்தனர்.
அவரே மேல்-சிறுகதை
Reviewed by Priya Anand
on
April 01, 2016
Rating: 5
Reviewed by Priya Anand
on
April 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.