Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

இனி பேஸ்புக் வழியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்; புதிய வசதி அறிமுகம்



நியூயார்க்,

சமூக வலைத்தள ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பேஸ்புக் வலைத்தளம் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக மொபைல் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. பணம் பரிமாற்றம் செய்யப்படும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு இருந்தாலே போதுமானது. எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த சேவையை வழங்குகிறது பேஸ்புக்.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைலில் இந்த வசதியை பயன்படுத்த முதலில் நாம் நமது டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-பில் சேர்க்க வேண்டும். பணத்தை பிறருக்கு அனுப்பவும், பெறவும் 'பேபால்' எலக்ட்ரானிக் மணி டிரான்ஸ்பர் வசதியை போன்றே இதிலும் தரப்பட்டுள்ளது. பயனாளர்களின் டெபிட் கார்டு பற்றி விவரங்களை பாதுகாப்பதற்காக 'பின் பேஸ்டு பாஸ்வேர்டு' பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.