உங்கள் கைப்பையில் இருக்கா அழகில் அசத்தும் ஐந்து பொருட்கள்
மேக்கப் போடுவதற்கு நூற்றுக்கணக்கான பொருட்கள் இருக்கின்றன. அவற்றை வீட்டில் வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், வெளியே செல்லும்போது அனைத்தையும் கொண்டு போக முடியாது. அதனால், இந்த ஐந்து பொருட்கள் உங்கள் கைப்பையில் இருந்தாலே அழகில் அசத்தலாம்.
1. வெட் கிளென்சிங் டிஷ்யூ:
ஈரமாக இருக்கும் இது முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. ஒரு நொடியில் முகத்தை கழுவியதுபோல சுத்தமாக்க இதற்கு இணை ஏதுமில்லை.
2. பவுன்டேஷன்:
பவுன்டேஷன் முகத்திலுள்ள மாசுகளை மறைத்து பொலிவான தோற்றத்தை தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உள்ள பவுன்டேஷனை தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைத்து வெயிலின் கதிர்களிலிருந்தும் முகத்தை பாதுகாக்கும்.
3. மஸ்காரா:
மிகவும் முக்கியமானது. முகத்தை அழகாக காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கண்களுக்கு மஸ்காரா போடுவதால் ஒரு நொடியில் கண்களின் அழகை பலமடங்கு அதிகரித்து விடும். சிறிய கண்களையும் பெரிதாக தோன்ற வைக்கும் தன்மை மஸ்காராவுக்கு உண்டு.
4. லிப்ஸ்டிக்:
இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுத்து உதட்டை அழகாக காட்டும். உதடுகளுக்கும், கண் இமைகளின் மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.
5. காம்பேக்ட்:
மேக்கப்புக்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்து செல்ல வேண்டாம். சில விநாடியில் அழகை அதிகரித்துக் காட்ட இனி ஒரு மேக்கப் மூட்டையை சுமக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.
உங்கள் கைப்பையில் இருக்கா அழகில் அசத்தும் ஐந்து பொருட்கள்
Reviewed by
Priya Anand
on
April 04, 2016
Rating:
5
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.