Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவசமாக தூர்தர்ஷன் பார்க்கும் வசதி அறிமுகம்


புதுடெல்லி:

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இலவசமாக டிவி சேனல்களை கண்டுகளிக்க புதிய சேவையை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது. டி.டி.டி. (Digital Terrestrial Television services) என அழைக்கப்படும் இந்த வசதி  டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்பூர், இந்தூர், அவுராங்காபாத், போபால், பெங்களூர், அகமதாபாத் ஆகிய 16 நகரங்களில் கடந்த பிப்ரவரி 25-ந்தேதி ஆரம்பிக்கப்பட்டது.

ஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பொருத்தி டிவி சேனல்களை கண்டு ரசிக்கலாம். இந்த டாங்கிள்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. இதற்கென பிரத்யேக ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் நிறுவினால் டி.டி சேனல்களின் சிக்னலை பெற்று டிவி சேனல்களை காணலாம்.

டாங்கிள் வாங்குவதற்கு மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதற்கு இண்டர்நெட் எதுவும் தேவையில்லை. தற்போது, டி.டி. நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான் சேனல்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.

1 comment:

  1. Why your app didn't work? Please rectify that problem?

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.