அ.தி.மு.க ஆட்சியில் ரேஷன் கார்டு அடிக்க கூட அவர்களுக்கு நேரம் இல்லை, ஸ்டிக்கர் மட்டுமே அடிக்க நேரம் இருந்திருக்கிறது என தி.மு.க மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டினார்.
கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதி தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிராபாகரனை ஆதரித்து, போத்தனூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
'' கடந்த 5 ஆண்டுகளாக மக்களையே சந்திக்காத முதல்வரும், மக்களால் முதல்வரை சந்திக்க முடியாத ஒரு ஆட்சியும் நடந்தது என்றால் அது ஜெயலலிதாவின் ஆட்சியாகத்தான் இருக்கும். மக்கள் சந்திக்க முடியாதது ஒருபுறம் என்றால், மத்திய அமைச்சர்களாலேயே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகரும், பியூஸ் கோயேலும் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டும் தரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டரான கோவை மாநகரில், தொழில் பிரச்னையால் 30 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. தொழிலாளர்கள் பசி, பட்டினியால் வாடும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகம் தொழில்வளர்ச்சியில் பின்தங்கியதுதான் ஜெயலலிதாவின் சாதனை. ஏதாவது ஒரு துறையாவது வளர்ச்சி பெற்றதா என்றால் எதுவும் இல்லை. தமிழகம் பாதுகாப்பு அற்ற மாநிலங்களில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் அதிகமுறை கண்டனங்களை வாங்கிய அரசாக ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு விளங்குகிறது.

தி.மு.க ஆட்சியில் ரூ. 14 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை ரூ.36 ஆயிரம் கோடியாக ஆக்கினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூடினோம். ஆனால், இந்த ஆட்சியில் முறைகேடாக 4,500 பார்கள் இயங்குகின்றன.
தற்போது படிப்படியாக மதுவிலக்கை குறைப்பேன் என்கிறார். கண்டிப்பாக மதுவிலக்கை அவர் கொண்டு வர மாட்டார். காரணம், அவரால் நடத்தப்படும் மிடாஸ் மது ஆலைக்கு வருமானம் போய்விடுமே. அ.தி.மு.க ஆட்சியில் ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படவில்லை. ரேஷன் கார்டே கொடுக்கவில்லை. ரேஷன் கார்டு அடிக்கக் கூட அவர்களுக்கு நேரம் இல்லை, ஸ்டிக்கர் மட்டுமே அடிக்க நேரம் இருந்திருக்கிறது. பிரசாரத்திலும் கூட நவீன தீண்டாமையை ஜெயலலிதா கடைபிடிக்கிறார். அதனால்தான் வேட்பாளர்களுக்கு, கீழே தனி மேடை அமைத்து அமர வைத்திருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் கோடநாட்டிலும், சிறுதாவூரிலும், போயஸ் தோட்டத்திலும் ஓய்வு மட்டுமே ஜெயலலிதா எடுத்து வந்தார். தேர்தலுக்குப் பின்னர் அவர் நிரந்தரமாக ஓய்வு எடுக்க மக்கள் அனுப்பத்தான் போகிறார்கள்.
மக்களுக்காக இந்த வயதிலும் தலைவர் கருணாநிதி உழைத்து வருகிறார். அவர் முதல்வர் ஆனதும் அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும். நீங்கள் நினைக்கும் ஆட்சி மலரும்'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.