Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

ஐபிஎல்-லில் விளையாடி வந்த கெய்லுக்கு திடீர் ஓய்வு கொடுத்த மகன்!


ஐபிஎல் கிரிக்கெட்டில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கெய்ல்  ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு அணி இரண்டு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (ஹைதராபாத்), ஒன்றில் தோல்வியும் (டெல்லி) கண்டுள்ளது.

இந்நிலையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த கெய்லின் மனைவி நடாஷா பெரிட்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கெய்ல் அவசரமாக தாயகம் திரும்பி உள்ளார். கெய்ல்-நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் புனே அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு போட்டிகளிலும் கெய்ல் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கெய்ல் இல்லாத நிலையில் அணித்தலைவர் கோலி, டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோரைத்தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. கெய்லுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.