Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

விஷ ஊசி போட்ட நிலையில் டாக்டர், மகள் மர்ம மரணம்


திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனி நால்ரோடு பகுதியில் நேற்று இரவு நீண்டநேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். காரை திறக்க முயன்றபோது உள்பக்கமாக லாக் செய்யப்பட்டிருந்தது. உள்ளே இருவர் சீட்டில் தலை சாய்ந்தபடி சரிந்தநிலையில் கிடந்ததால் உடனடியாக திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு முதியவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களை சோதித்து பார்த்தனர்.

அப்போது இருவர் கையிலும் மருந்து ஊசி இருந்துள்ளது. இதனால் விஷம் அல்லது மயக்க ஊசி போட்டிருக்கலாம் என்று கருதிய போலீசார் உடனடியாக இருவரையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.விசாரணையில், இறந்தவர் திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம்(60) என்பது தெரியவந்தது. இவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் மயக்கவியல் டாக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். 

அருகில் இறந்து கிடந்தது இவரது மகள் வானதி(25) என்பதும் தெரிய வந்தது. வானதி வழக்கறிஞர். இவரது கணவர் கார்த்திக்கேயன். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இப்பகுதியில் காரில் இறந்து கிடந்தது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.குடும்பம், தொழில் பிரச்னை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.