Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

இந்த கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவனை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் ?



ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..
சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்
பதில்;- அவரது கடைசி போரில்..!
கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்.
கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!
கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!
கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!
கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?>
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
மாணவன் சரியாக
தானே பதிலளித்துள்ளான்..???

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.