Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2016

பட்டப்பகலில் பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்.... வீடியோ


பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சார் பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவரை மர்மநபர் தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்த்சார் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி அங்குள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 24 வயது மதிக்கத்தக்க பெண்ணை, அவரது அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் ஒருவர் தரதரவென இழுத்து வெளியே கொண்டு வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அந்த பெண்ணை சாலை வழியாக இழுத்துச் சென்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார்.

அங்கிருந்து மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்ற அவரை அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் அடுத்த நாள் தமதுவீடு வந்து சேர்ந்த பின்னர் நடந்த சம்பவங்களை குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவத்தில், உதவி கேட்டு அலறிய அந்த பெண்ணுக்கு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து 5 நாட்கள் கடந்த பின்னரே பொலிசார் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 20 நாட்களுக்கு மேலாகியும் இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அலுவலகத்தில் இருந்து அந்த பெண்ணை மர்மநபர் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் செல்வது அங்கிருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

இருப்பினும் பொலிசார், சம்பந்தப்பட்ட நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.