Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விடுதலைப்புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந் திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது. 

பின்னர் முருகன், பேரறி வாளன், சாந்தன், நளினி ஆகி யோருடைய மரண தண் டனையும் ஆயுள் தண்ட னையாக மாற்றப்பட்டது. ஆயுள் தண்டனை பெற்ற வர்கள் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை மாநில அரசே தன்னிச்சையாக முடிவு செய்து விடுவிக்கலாம் என சட்ட விதிகள் உள்ளன. 
ஆனால், இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர். எனவே, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. 


இதையடுத்து 2014-ம் ஆண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்து கேட்பதற்காக கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. 

சுப்ரீம் கோர்ட்டு 5 பேர் கொண்ட பெஞ்ச்சை அமைத்து விசாரித்தது. அந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய சட்டப்படி சி.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியது. இதனால் அப்போது 7 பேரையும் விடுதலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர். அதில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருப்பதால் எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற அவர்கள் 24 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு கருதுகிறது. இது சம்பந்தமாக தங்களது முடிவை தெரிவிக்க வேண் டும். என கூறப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை பதில் அனுப்பி உள்ளது. அதில், இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையின் கீழ் இருப்பதால் யாராலும் இதன் மீது இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழக அரசின் கடிதம் வந்ததை அடுத்து மத்திய சட்டத்துறையிடம் நாங்கள் இது சம்பந்தமாக கருத்து கேட்டோம். 

அதற்கு சுப்ரீம் கோர்ட் டில் இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த முடிவும் இப்போது எடுக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை. எனவே, 7 பேரையும் விடு தலை செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.