மனைவிக்கு விருப்பம் இல்லாதநிலையில் அவரை கணவன் கற்பழிப்பதை கிரிமினல் குற்றம் ஆக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்
பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ள மாவட்டங்களில், மத்திய அரசு ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 100 மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மேலும் 61 மாவட்டங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அறிமுக நிகழ்ச்சி, நேற்று டெல்லியில் நடைபெற்றது.
அதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி கலந்து கொண்டார்.
கிரிமினல் குற்றம்
பின்னர், மேனகா காந்தியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, ‘மனைவி விரும்பாத நிலையில் அவரை கணவன் கற்பழிப்பதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகிறதா?’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு மேனகா காந்தி, ‘ஆமாம். தற்போது அதுபற்றி பரிசீலித்து வருகிறோம். அவ்விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்று வருகிறோம். விரைவில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.
கடும் எதிர்ப்பு
முன்னதாக, கடந்த மாதம் பாராளுமன்றத்தில் இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த மேனகா காந்தி, ‘இந்தியாவில் எழுத்தறிவின்மை, வறுமை, எண்ணற்ற சமூக பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள், திருமணத்தை புனிதமாக கருதும் மனப்பான்மை நிலவுவதால், இந்தியாவில் அதை அமல்படுத்த முடியாது’ என்று கூறினார்.
அதனால் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது நிலையை மாற்றிக்கொண்ட மேனகா காந்தி, ‘மனைவியை கணவன் கற்பழிக்கும் சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால், அதை கிரிமினல் குற்றம் ஆக்குவது பற்றி பரிசீலிப்போம்’ என்று கூறினார்.
Thanks To: Daili Thanti.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.