குறிஞ்சிநகரில் சங்கர் தனது பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஜோதிக்கு டவுனை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அடிக்கடி ஜோதி அவருடன் செல்போனில் பேசுவாராம். இதை அறிந்த சங்கர் மனைவியை கண்டித்தார்.
அதன்பிறகும் ஜோதி செல்போனில் அவருடன் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அந்த நபருடன் தொடர்பை துண்டிக்குமாறு கூறி சங்கர் ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் தொடர்பை கைவிடாமல் அடிக்கடி போனில் பேசி வந்தார்.
இது சங்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவி ஜோதியை கொலை செய்வது என சங்கர் முடிவு செய்தார். கடந்த 2 நாட்களாக சங்கர் வேலைக்கு செல்லாமல் மனைவியை கண்காணித்ததாக தெரிகிறது. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். அவரது தாய் மற்றும் குழந்தைகள் மாடியில் படுத்திருந்தனர்.
இன்று அதிகாலை சங்கருக்கும், ஜோதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சங்கர், ஜோதியை தாக்கியதோடு துண்டால் கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சு திணறி ஜோதி பரிதாபமாக இறந்தார்.
உடனே வீட்டை விட்டு வெளியேறிய சங்கர் சுத்த மல்லி போலீஸ் நிலையத்தில் நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் சங்கர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கொலை நடந்த சங்கரின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சுத்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.