Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

அவன் + அவள் + அது + ஆபரேசன் செய்வதில் அரசு கெடுபிடி ஜாஸ்தியாக்கும்!


மதுரை அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை மருத்துவக் கல்லூரி டீன் எம்ஆர். வைரமுத்து ராஜு தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்க பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “சராசரியாக 50 ஆயிரம் ஆண்களில் ஒருவருக்கு பாலினப் பிரச்சி னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவர்கள் பிறவியில் ஆணாக இருப்பார்கள். ஆனால் மனது பெண்ணை போன்றும், உடலமைப்பு ஆணை போன்றும் இருக்கும். அதனால், இவர்களால் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்க முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு மன நோய் ஏற்படும். நிம்மதியாக இருக்க முடியாமல் குடும்பத்தினர், நண்பர்கள், உறவி னர்கள் ஒதுக்குவதால் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.ஆண்களுக்கு இதுபோன்ற பாலினப் பிரச்சினை ஏற்படுவதற்கு, எந்தக்
காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இயற்கையாகவே இப் பிரச்சினை ஏற்படுகிறது.

இவர்களுக்கு மனநல ஆலோசனையும், விழிப்புணர்வும் தேவை. தற்போது இவர்களில் பெரும்பாலான ஆண்கள், பெண்ணாக மாற விரும்புகின்றனர். இவர்கள் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறுகின்றனர். இது போன்ற அறுவை சிகிச்சைகள் தற்போது பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவு நடக்கத் தொடங்கி உள்ளன.
இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்வதிலும், சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. அதனால், இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். பெண்ணாக மாற விரும்பும் ஆண் களுக்கு, உண்மையாகவே அவர்களுக்கு பெண் உணர்வு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவர் களை மனநல மருத்துவரைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் அவர்களுக்கு பெண் உணர்வு இருக்கிறதா, பெண்ணாக மாற விரும்புவதால் அவர்களுக்கு நன்மை ஏற்படுமா? என சான்றளித்த பின்னரே, இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே, இந்த மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
பெண் உணர்வுள்ள இந்த ஆண்கள் பெண்ணாக மாற விரும்புவது தவறில்லை. இவர்கள் பெண்ணாக மாறுவதால் இவர்கள் படிப்பு, வாழ்க்கை முறைகளில் சில அடிப்படை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களில் ஆணாக இவர்கள் பதிவு செய்யப் பட்டு இருப்பார்கள். அறுவை சிகிச்சைக்குப் பின் அதிலும் மாற்ற செய்ய வேண்டும். அதனால், மத் திய, மாநில அரசுகள் இந்த நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும்.2 வயது முதல் 4 வயதுக்குள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களே பாலினப் பிரச்சினை களை தீர்மானிக்கின்றன. தற்போது பாலினக் குறைபாடுள்ளவர்கள் விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. அரசும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அளிக்கத் தொடங்கிவிட்டன” என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.