April 6, 2016
பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது. குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம். மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம். மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் B6 அவசியமான ஒன்றாகும். மேலும், விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.
பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
Reviewed by மறத்தமிழன்
on
April 06, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.