நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவின் ஓலைக்குடி கிராமத்தை சேர்ந்த குரு மூர்த்தி, சரண்யா ஆகிய இருவர் தூக்கில் சடலாமாக கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த குருமூர்த்தி தலித் சமூகத்தை சார்ந்த்தவர். இவரும் வன்னிய சமூகத்தை சேர்ந்த சரண்யாவும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 16 ஆம் தேதியன்று இந்த இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் சரண்யாவின் தந்தை தன் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளர். அதன் பின் கடந்த 20 ஆம் தேதி ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு இரு சடலங்கள் அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குரு மூர்த்தி மற்றும் சரண்யா என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் உடல் பொறையார் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சந்தேகிகின்றனர். தூக்கில் சடலமாக கிடந்த இருவரின் கால்களும் தரையை தொட்ட நிலையில் இருந்தன என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்களின் உடலில் காயம் பட்டதற்கான அடையாளங்கள் இருகின்றது என்றும் குருமூர்த்தியின் மேல் ஆசிட் போன்று ஏதோ ஒன்று இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் கம்மியுநிஸ்ட் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.