Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

தேர்தலுக்கு முன் ஜெ., சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு ?



தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மே 16 ம் தேதி நடக்கும் தேர்தலின் போது அதிமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் முதலில் கர்நாடக தரப்பு வாதம் நடைபெற்றது. ஆச்சாரியா, தாவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், நேற்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, அரசு தரப்பு கூறியதை போல, சசிகலா, ஜெயலலிதாவின் அதிகார மையமாக இருந்தது கிடையாது. சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை. ஜெயலலிதா-சசிகலா இடையே பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று ஐகோர்ட் தெளிவாக கூறிவிட்டது. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காக சொத்து குவித்தார்கள் என்று கூற முடியாது என வாதிட்டார்.

ஏப்ரல் 21 (நாளை) இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவர் தனது வாதத்தை முடிக்க உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து, கர்நாடக தரப்பு மீண்டும், பதில் வாதம் செய்ய நீதிபதி அவகாசம் தருவார். இந்த பதில் வாதத்தை, ஏப்ரல் 22 அல்லது சில நாட்களில் கர்நாடக அரசு முன்வைக்கும். இந்த வாதம், எழுத்துப்பூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் வாதிடவும் குறுகிய கால அளவில் வாய்ப்பு தரப்படலாம் எனவும், தெரிகிறது. இதன்பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். அநேகமாக அடுத்த வாரத்தில், தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக தேர்தல் களத்தில் அதிமுக., அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு நேற்று கைவிரித்துள்ளது அதிமுக.,விற்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சமயத்தில் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் தேர்தலுக்கு முன்னரே வெளியாகும் என கூறப்படுவதால் அதிமுக.,விற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.