Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குப் குப் என "ரயில்" விட்ட பாலகிருஷ்ணா...!


இருபுறமும் நடிகர்கள் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்து ஜாலியாக சிகரெட் ஊதியிருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா . 

நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, நிவின் பாலி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். 

மைதானத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் நடிக, நடிகையர் பலரும் சமாளிக்க முடியாமல் திணறினர்.

இதில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வெயிலால் பனியனுடன் அமர்ந்து போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து அவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. 

இருபுறமும் நெருக்கமாக விஜயகுமார், சிவராஜ்குமார் அமர்ந்திருக்க, நடுவில் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணா ஜாலியாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார். 

சற்றுத்தள்ளி தமன்னா, ஜனனி ஐயர் போன்ற நடிகைகளும் அமர்ந்திருந்தனர். ஆனால் அருகில் மற்றவர்கள் இருக்கிறார்களே என்ற எந்த நெருடலுமின்றி பாலகிருஷ்ணா புகைபிடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பாலகிருஷ்ணா ஒரு எம்எல்ஏ வாக இருந்து கொண்டு பொது இடத்தில் இப்படிப் புகைபிடிக்கலாமா? என சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் மைதானத்தில் சிகரெட் பிடித்ததாக, நடிகர் ஷாரூக்கானுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.filmibeat.com/news/balakrishna-smoking-chepauk-stadium-039785.html
Read more at: http://tamil.filmibeat.com/news/balakrishna-smoking-chepauk-stadium-039785.html

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.