ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தேர்தல் ஆணையம் அதிரடியாகச் சொன்னாலும், பல மாவட்ட கலெக்டர்களின் அ.தி.மு.க ஆதரவுப் பாசம் அதிர வைக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு, ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, அவர்களை வேறு துறைக்கு மாற்றுவது வழக்கம். ஆனால், 'அ.தி.மு.கவுக்கு ஆதரவாக பகிரங்கமாகச் செயல்படும் கலெக்டர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் அரசுத் துறை அதிகாரிகள் சிலர்.
'அ.தி.மு.க ஆதரவு கலெக்டர்கள் யார் யார்?' என்பது பற்றியும் நம்மிடம் பட்டியலிட்டார்கள்.
" தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்ட கலெக்டர்களில் நேரடியாக ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வந்தவர்கள் பத்து பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள். கோவை மாவட்ட கலெக்டராக இருக்கும் அர்ச்சனா பட்நாயக், வரலாறு காணாத வகையில் ஏழு ஆண்டுகளாக கலெக்டர் பதவியில் நீடிக்கிறார். நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த சமயத்தில், கொடநாடு விவகாரத்தில் இவர் செய்த சில செயல்கள் அ.தி.மு.க தலைமையின் கவனத்தை ஈர்க்கவே, தொடர்ந்து பதவியில் நீட்டிக்கப்பட்டார்.
நீலகிரியில் ஏராளமான ரிசார்ட்டுகளுக்கு விதிகளை மீறி அனுமதி கொடுத்ததில் இவருடைய பங்கு ரொம்பவே அதிகம். ரிசார்ட் முதலாளிகளுடன் இவரது கணவருக்கு உள்ள தொடர்பு பற்றி நீலகிரி மக்கள் அறிவார்கள். தி.மு.க ஆட்சியில் கலெக்டராக வந்தவர், தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கிறார். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அமைச்சர் வேலுமணி என்ன சொல்கிறாரோ, அதைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டார். இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பத்து தாலுகாக்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதுவரையில் மக்களின் எந்த கோரிக்கையையும் தீர்த்து வைத்ததில்லை. 'தேர்தலில் அ.தி.மு.கவுக்கு சாதகமாக எப்படிச் செயல்பட வேண்டும்?' என்பதைப் பற்றித்தான் தினமும் விவாதித்து வருகிறார். அந்தளவுக்கு அ.தி.மு.கவின் அதிதீவிர விசுவாசியாக இருக்கிறார் அர்ச்சனா பட்நாயக்.
இதேபோல், திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருக்கும் ஜெயந்தியின் அ.தி.மு.க பாசம் அதிர வைக்கக் கூடியது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, 'அம்மா வெளியில் வர வேண்டும்' என்று சொல்லி, கோவிலில் யாகம் நடத்திய பெருமைக்குரியவர். மாவட்டத்திற்கு அப்போது அமைச்சராக இருந்த ஆனந்தனின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தவர். இப்போது திருப்பூர் மாவட்டத்தின் நிழல் மாவட்டச் செயலாளராக வலம் வருகிறார். இவரைவிட, நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் ஒருபடி மேல். மாவட்ட கலெக்டராக பதவி கிடைத்ததும், கோட் சூட் சகிதமாக ஜெயலலிதா காலில் விழுந்து பெருமை தேடிக் கொண்டவர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் மருமகன் என்பதை கூடுதல் பலமாக நினைக்கிறார். இவர் தலைமையில்தான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது நீலகிரி. நெல்லை மாவட்ட கலெக்டராக இருக்கும் கருணாகரனின் அ.தி.மு.க பாசம் மாவட்டத்திற்கே தெரியும். நேர்மையானவர் என்ற பெயரோடு இருக்கும் கருணாகரன், முன்பு கோவை மாவட்டத்திலும், அடுத்து, நெல்லையில் கலெக்டராக நீடிக்கிறார். 'தேர்தல் நேரத்தில் இவருக்குள் இருக்கும் அ.தி.மு.க பாசம் தலையெடுத்துவிடக் கூடாது' எனக் கவலைப்படுகிறார்கள் நெல்லை மாவட்டத்தில்.
நாமக்கல் கலெக்டராக இருக்கும் தட்சிணாமூர்த்தி, அரசியல்வாதிகளுக்கு இணக்கமாகச் செல்லக் கூடியவர் என்ற நற்பெயரில் இருப்பவர். மாவட்டத்தில் அ.தி.மு.கவினர் சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்யக் கூடியவர். அதனாலேயே நீண்ட நாட்களாக நாமக்கல்லில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி கலெக்டரின் அ.தி.மு.க பாசத்தைப் பற்றி தனியாக விளக்க வேண்டியதில்லை.
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், 'அம்மா உத்தரவால் மழை பெய்தது' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர். அம்மா புராணத்தை கட்சிக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ, தினமும் ஆயிரம் முறையாவது சொல்லும் அளவுக்கு கட்சிக்காரராகவே வலம் வருகிறார். ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், அ.தி.மு.கவின் ஆதரவாளர் என்று காட்டிக் கொள்ளாமல், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படக் கூடியவர் என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஞானசேகரன் மூன்று ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் இருப்பதற்குக் காரணம், அ.தி.மு.க தலைமையின் மீது அவர் காட்டும் விசுவாசம்தான். நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் காரில் இருந்து 93 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணத்திற்கு முறையான ஆவணம் இருக்கிறது என்று சொல்லி, அவரிடமே ஒப்படைத்த நேர்மையாளர்தான் இந்த ஞானசேகரன்" என விரிவாகவே பட்டியலிட்டார் அவர்.
எப்போதுமே, தேர்தல் நெருக்கத்தில் ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளை அதிரடியாக மாற்றி மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்ளும் தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தலிலும் அதேபோல் அதிரடிகளைத் தொடர வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.