தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, மேற்கு வீராகுட்டி தெருவை சேர்ந்தவர் டில்லி ராம் (40), ஆர்.கே.நகர் தொகுதி 42வது வட்ட அதிமுக பிரமுகர். இவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவரது கடைக்கு வந்த 2 பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். டில்லிராம், அவர்களிடம் பணம் கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள், கடையை சூரையாடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து டில்லிராம் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாணை நடத்தி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் டில்லிராம் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்கில் அங்கு வந்த 4 பேர், கண் இமைக்கும் நேரத்தில் டில்லிராமை சரமாரியாக தாக்கி, அங்கிருந்த பாட்டிலை உடைத்து இடுப்பில் சொருகிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த டில்லி ராமை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிந்து, தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.