அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே 2-வது மற்றும் 3-வது இடத்துக்கு சண்டை நடக்கிறது. அதனால் தே.மு.தி.க., த.மா.க., மக்கள் நல கூட்டணிக்குத்தான் முதலிடம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தே.மு.தி.க- மக்கள்நல கூட்டணி மற்றும் த.மா.கா. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "நான் அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் புரட்டிப்போடும் மாஸ்டர். முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னார்களாம், காங்கிரசும், த.மா.கா.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அப்போ அ.தி.மு.க. எதில் இருந்து வந்தது? தி.மு.க.வில் இருந்து வந்தது. அப்படியானால் நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.
புதுச்சேரியில் மாற்றம் வரவேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். அதே மாற்றம் தமிழ்நாட்டிலும் வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க. 2-வது இடத்துக்குத்தான் வரும் என்று அ.தி.மு.க. சொல்கிறது. அ.தி.மு.க.வுக்கு 3-வது இடம் என்று தி.மு.க. சொல்கிறது. அவர்களுக்கு 2-வது, 3-வது இடத்துக்குத்தான் சண்டை. முதலிடம் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா.வுக்குத்தான்.
விஜயகாந்துக்கு பேச தெரியவில்லை என்று எழுதுகின்றனர். நான் நன்றாகத்தானே பேசுகிறேன். ஆங்கிலத்தில் பேசினால் கூட புரியவில்லை என்று சொல்லலாம். தமிழில் தானே பேசுகிறேன். இதுகூடவா புரியவில்லை. விஜயகாந்துக்கு தொண்டையில் இன்பெக் ஷன் என்கிறார்கள். எத்தனை கூட்டங்களில், எத்தனை இடங்களில் பேசியிருப்பேன்.

மின்சாரத்துறையில் 25 ஆயிரம் கோடி ஊழல் என்கிறார்கள். அந்த துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நான் ஸ்லோ விஸ்வநாதன் என்று தான் கூப்பிடுவேன். நத்தை ஸ்லோவாகத்தான் போகும். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி ரப்பர் ஸ்டாம்பு போன்றது. இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும். மதுவிலக்கு படிப்படியாக குறைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத்தானே 6 மாதத்துக்கு முன்பு நாங்கள் கேட்டோம். மது விஷயங்களில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டுக்களவாணிகள்.
கருணாநிதி இந்த விஜயகாந்தை பிடிக்கப்பார்த்தார். கழுவுற மீனில் நழுவுகிற மீன்போல நான் நழுவி வந்து விட்டேன். பணத்தை கொடுத்து விஜயகாந்தை வாங்க முடியாது. கேரளாவில் ரூ.1 கோடி, ரூ.2 கோடி ஊழல் என்றாலே பிரச்னையை கிளப்புகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடி, ரூ.25 ஆயிரம் கோடியெல்லாம் எளிதாகி விட்டது" என்று பேசினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.