Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

அவமதிப்பு விவகாரம் எதிரொலி ‘தேசிய கொடியை சட்டசபைக்கு கொண்டு வராதீர்கள்’ அனைத்து உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் வேண்டுகோள்


அவமதிப்பு விவகாரம் எதிரொலியாக ‘‘தேசிய கொடியை சட்டசபைக்கு கொண்டு வராதீர்கள்’’ என்று அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் ஹரிபாவு பாக்டே வேண்டுகோள் விடுத்தார்.

ஜிதேந்திர அவாத்
தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் ஜிதேந்திர அவாத் கடந்த 4–ந் தேதி சட்டசபையில் அமளி ஏற்பட்ட போது, தன்னுடைய கையில் தேசிய கொடியை பிடித்திருந்தார். மேலும், அதனை பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் வினியோகம் செய்தார்.

இதற்கிடையே, அவர் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, ஆளும்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாக்டேயிடம் புகார் செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் ஜிதேந்திர அவாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

சபாநாயகர் வேண்டுகோள்
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சட்டசபையில் சபாநாயகர் ஹரிபாவு பாக்டே அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது, ‘‘சட்டசபையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், எந்தவொரு உறுப்பினரும் வேண்டுமென்றே, தேசிய கொடியை அவமதிக்கவில்லை என்பது தெரிகிறது.

இருந்தாலும், இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் யாரும் சட்டசபைக்கு தேசிய கொடியை கொண்டு வராதீர்கள். இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும்’’ என்று அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.