Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

சிரியாவில் குவியல் குவியலாக பிணங்கள் ராணுவம் அதிர்ச்சி தகவல்


ஈராக் -சிரியாவின் சில பகுதிகளை பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.சிரியாவின் பெரும்பான்மையான பகுதிகள் அவர்கள் கைவசம் இருந்தது. இந்நிலையில் புராதன நகரான பல்மைராவை மீட்க சிரியா ராணுவம், ரஷ்யாவின் உதவியை நாடியது. ரஷ்யப்படைகளின் இருமுனைத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பல்மைராவிலிருந்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் பின்வாங்கினர்.

இதனையடுத்து, பல்மைரா நகரம் முழுமையாக சிரிய ராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்தது. இந்த நிலையில் பல்மைரா நகரில் பிணக்குவியல் ஒன்றை சிரியா ராணுவம் கண்டுபிடித்துள்ளது. 45 நபர்கள் கொண்ட அந்த குவியலில் 23 பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்கள் உள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சில உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், எஞ்சிய உடல்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் அந்த அந்த உடல்கள் அதிகாரிகள், ராணுவத்தினர், அரசு ஆதரவு போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்களை மீட்டு சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹாமஸ் நகரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிரியாவின் புராதன நகரான பல்மைராவை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடந்த ஆண்டு கைப்பற்றி அங்கிருந்த புராதானமான சின்னங்களையும், வரலாற்று சிறப்புமிக்க கோவில்களையும் தகர்த்தனர். தற்போது பல்மைரா சிரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதை அடுத்து, சேதமடைந்த புராதனச் சின்னங்கள் மீண்டும் மறுசீரமைக்கப்படும் என சிரிய தொல்பொருள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.