Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2016

'ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுகிறீர்கள், நடவடிக்கை எடுப்பேன்' சுப்பிரமணிய சாமிக்கு சபாநாயகர் எச்சரிக்கை


'ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுகிறீர்கள், உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்' என்று பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு மாநிலங்களவை சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துஉள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி.யாக பதவியேற்றார். பதவி ஏற்றதை தொடர்ந்து இரண்டு நாட்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று முதல்முறையாக பேசுகையில் சுப்பிரமணிய சாமி ஹெலிகாப்டர் ஊழலை கையில் எடுத்தார். இத்தாலி கோர்ட்டில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் சமர்ப்பித்த கடிதத்தில் சோனியா காந்தியின் பெயரும் இடம் பெற்று உள்ளதாக குறிப்பிட்டார். பின்னர் ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் போராட்டம் நடத்தினர். பா.ஜனதா உறுப்பினர்களை அடிக்கவும் பாய்ந்தனர். இதைத்தொடர்ந்து சோனியா குறித்து சுப்பிரமணிய சாமி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

இன்றும் மாநிலங்களவையில் சர்ச்சையை ஏற்பத்தினார். மாநிலங்களை பூஜ்ஜிய நேரத்தின் போது சமாஜ்வாடி எம்.பி. சவுத்ரி முன்னவர் சலீம்,  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக பேசினார். அவருடைய பேச்சில் சுப்பிரமணிய சாமி பெயர் இடம்பெற்றது. இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளித்த சுப்பிரமணிய சாமி சர்ச்சைக்குரிய சில கருத்துகளை வெளியிட்டார். உடனே அவரது கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து சுப்பிரமணிய சாமியின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.

அப்போது சுப்பிரமணிய சாமிக்கு எச்சரிக்கை விடுத்த குரியன், ‘ நீங்கள் தேவையில்லாமல் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுகிறீர்கள். உங்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் தொடர்ந்து ஆத்திரமூட்டி வருகிறீர்கள். உங்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்’ என்றார்.  மேலும் சுப்பிரமணிய சாமியின் கருத்துகளை வெளியிட வேண்டாம் என ஊடகங்களையும் குரியன் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சுப்பிரமணிய சாமி உறுப்பினராக பதவியேற்று 2 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் 2 முறை அவரது கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இன்னும் எத்தனை முறை நீங்கள் நீக்கப்போகிறீர்கள்’ என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பினார்.  குரியன் இருக்கைகளுக்கு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் சுப்பிரமணிய சாமியை இருக்க கோருங்கள் என்றனர்.

இதனால் கோபமடைந்த குரியன், ‘நீங்கள் இதுபோன்று என்னை வழிநடத்த முடியாது. ஒன்றுமில்லாதவற்றுக்காக நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். அவரது கருத்துகளை நான் நீக்கிவிட்டேன். அது ஆவணமாகாது. தொலைக்காட்சிகளிலும் வெளிவராது’ என்று கூறினார். உடனடியாக குரியன் முக்தர் அப்பாஸ் நக்விடம் பேசினா, மாநிலங்களவை நிலைமை குறித்து அவரிடம் விளக்கினார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சாமியிடம் சென்று நக்வி பேசினார். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சாமி இருக்கையில் அமர்ந்தார். காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களுடைய இருக்கைக்கு சென்றனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.