Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2016

விஜயகாந்த் அமைத்திருப்பது நகைச்சுவை கூட்டணி நடிகர் செந்தில் தாக்கு


ஆத்தூர் சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் அமைச் சர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து  நடிகர் செந்தில் சின்னாளபட்டியில் வாக்கு சேகரித்தார்.  அவர் பேசிய தாவது:-

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகள், சொல்லாதவற்றையும் மக்களுக்காக நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இந்த பணிகளே அ.தி.மு.க. வெற்றிக்கு வழி வகுக்கும். இந்த மக்கள் நல பணியால் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்திற்கு ஜெயலலிதா தான் முதலமைச்சராக வருவார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். கருணாநிதி என்றால் குடும்ப அரசியலும், ஊழலும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்பெக்டரம் ஊழல் பணத்தில் கருணாநிதி குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலோடு திமுக கட்சியே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும்.

ஜெயலலிதா தயவால் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் தற்போது அமைத்துள்ள கூட்டணி நகைச்சுவை கூட்டணியாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர்  பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.