Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

அரசியலுக்கு வருவேனா? சகாயம் ஐஏஎஸ் பதில்


தேர்தலில் நேர்மையான, தகுதியானவர்களை தேர்வு செய்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பதை வாக்காளர்கள் வரும் மே மாதம் 16ம் தேதி தீர்மானிக்கவுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தலில் வாக்களிப்பதற்காக பணம், பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது



இது தொடர்பாக பல்வேறு விளம்பரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதேநேரம் சமூக ஆர்வலர்கள் பலரும் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று தாங்களாக முன்வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கலில் சகாயம் ஐஏஎஸ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் நேர்மையான, தகுதியானவர்களை தேர்வு செய்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்தால் யாரும் வாங்கிக்கொள்ள கூடாது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. எனது பயணம் சமுதாயத்தை நோக்கியே... என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.