Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

மும்பை ஐஐடியின் பேராசிரியர் மகள் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை


மும்பை பாவாய் பகுதியில் உள்ள ஐஐடியின் பேராசிரியர் ஒருவரின் மகள் நேற்று இரவு ஐஐடி வளாக கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த விவரம் வருமாறு:-

மும்பை ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஹேமசந்திரா. இவர் ஐஐடியின் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் துறை தலைவராக உள்ளார்.இவரது மகள் சரோஜா ஹேமசந்திரா (வயது 17) கேந்திரியா வித்யாலயாவில் 12 ம் வகுப்பு படித்து வந்தார்.ஹேமசந்திரா ஐஐடி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று மாலை சிவாலிக் கட்டிடத்தின் கீழ்  ரத்தம் வெள்ளத்தில் சரோஜா கிடப்பதை பார்த்து அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் தகவல் கொடுத்து உள்ளார். சரோஜா 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார்.இது குறித்து பவாய் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படிப்பதற்கு அழுத்தம் கொடுதத்தால் சரோஜா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம்தான்  மற்றொரு பேராசிரியரின் மகன் சைதன்யா வார்கர் தனது கையை அறுத்து  தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிட தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.