Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை


மலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன்(வயது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷானில் இயக்கி இருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு முன்பு முதல் காப்பியை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணன் ‘பிரிவியூ’ தியேட்டரில் போட்டு பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

படத்தை இயக்குனர் நன்றாக எடுக்கவில்லை என்றும், படம் ஓடாது என்றும் அவருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லி புலம்பினார். படத்துக்கு செலவழித்த ரூ.4 கோடியை இழந்து கடனாளியாகி விடுவேன் என்று அழுதபடி இருந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.