ஆமதாபாத்,
குஜராத்தில் பட்டேல் இனத்தவர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் மோதல் வெடித்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.
சிறை நிரப்பும் போராட்டம்
குஜராத்தில் கணிசமாக வாழ்ந்து வரும் பட்டேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட சிலர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றவும் வலியுறுத்தி சர்தார் பட்டேல் குழுவினர் நேற்று வடக்கு குஜராத் நகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினர்.
வருவாய் அதிகாரி காயம்
இதில் மேசனா நகரில் நடந்த போராட்டத்தில் இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் லால்ஜி பட்டேல் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் திடீரென மாவட்ட சிறையை நோக்கி ஊர்வலம் நடத்தினர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட உணவு கழகத்துக்கு சொந்தமான குடோன் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வருவாய் அதிகாரி உள்பட சிலர் காயமடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவு
உடனே போலீசார் தடியடி நடத்தியும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கலைத்தனர். இந்த மோதலில் லால்ஜி பட்டேலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேசனா பகுதியில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.
இதைப்போல சூரத் மற்றும் வடக்கு குஜராத் நகரங்களில் நடந்த போராட்டங்களிலும் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் அந்த பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. சூரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
முழு அடைப்பு
பட்டேல் இனத்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஆமதாபாத், சூரத் மற்றும் வடக்கு குஜராத் நகரங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே போலீசாரை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சர்தார் பட்டேல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.